News March 22, 2025
இந்தியாவின் அதிவேக ரயில் எது தெரியுமா?

இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா? தேஜஸ்தான். முதன் முதலாக 2017ல் அறிமுகமான தேஜஸ் மும்பையில் இருந்து கோவா வரையிலான 552 கி.மீ தூரத்தை 8 மணி 30 நிமிடங்களில் கடந்தது. 2019ல் தமிழகத்தில் அறிமுகமான தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து மதுரைக்கு 6 மணி 30 நிமிடங்களில் சென்றடைந்தது. அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆனால், தண்டவாள கட்டுப்பாட்டால் 130 கி.மீ வேகத்திலேயே இயக்கப்படுகிறது.
Similar News
News March 23, 2025
இபிஎஸ்-க்கு பவன் கல்யாண் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் பெரும் மகிழ்ச்சி என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வலிமையான தலைவராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டிய அவர், எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக சிறப்பாக இருக்க வேண்டும். NDA கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்ற அதிமுக, மீண்டும் இணையலாமே. அதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
News March 23, 2025
ஜூன் மாத தரிசன டிக்கெட்: நாளை புக்கிங்

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூன் மாதம் தரிசிப்பதற்கான ₹300 டிக்கெட் விற்பனை நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. தங்கும் அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. குழந்தைகளின் தேர்வுகள் முடிந்து ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கான <
News March 23, 2025
வெற்றி தொடர்ந்தால் கோப்பை எங்களுக்கே: படிதார்

கேப்டனாக தனது முதல் போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தமாக உணர்ந்ததாக, RCBக்கு முதல் வெற்றியைத் தேடித்தந்த ரஜத் படிதார் கூறியுள்ளார். இதேபோல், தொடர் வெற்றியை குவித்தால் கோப்பை தங்களுக்கே என்றார். கோலி போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டம் எனவும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறினார். முன்னதாக KKRக்கு எதிரான நேற்றைய போட்டியில், படிதார் 34 ரன்கள் எடுத்திருந்தார்.