News April 3, 2025
உலகின் முதல் சிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சிவனுக்கு முதலில் கோயில் கட்டியது தமிழ்நாட்டில்தான். ராமநாதபுரத்தில் இருக்கும் உத்திரகோசமங்கை கோயில்தான் அது. ராவணனுக்கு திருமணம் நடந்தது அங்குதான் என புராணத்தில் சொல்லப்படுகிறது. மரகதக் கல்லிலான ஐந்தரை அடி நடராஜர் சிலை இங்கிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த சிவன் கோயிலில் மட்டுமே தினமும் தாழம்பூவால் பூஜை செய்யப்படுகிறது. மீனவப் பெண்ணாக தோன்றிய அம்பிகையை சிவன் கரம்பிடித்த தலம் இது. SHARE IT.
Similar News
News September 19, 2025
இந்தியா, சீனாவிடம் டிரம்பின் பாட்சா பலிக்காது: ரஷ்யா

சீனா, இந்தியாவை மிரட்டி பணிய வைக்கலாம் என டிரம்ப் நினைத்தால், அது நடக்காது என ரஷ்ய அமைச்சர் செர்ஜி லவ்ரோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் பழங்காலம் முதலே சிறந்து விளங்கிய நாகரீகங்கள் எனவும், அவர்களிடம் போய் இதை செய், அதை செய், இல்லையென்றால் வரிவிதிப்பேன் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் வரிவிதிப்புகளால் மிரட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு சாடியுள்ளார்.
News September 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 463 ▶குறள்: ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். ▶பொருள்: பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
News September 19, 2025
சீனாவிற்கு செக் வைக்க அது எங்களுக்கு வேண்டும்: டிரம்ப்

ஆஃப்கனில் உள்ள பக்ரம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அது தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால், மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் அணு ஆயுத உற்பத்தி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த விமானப்படை தளத்தை, ஆஃப்கனில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியதும் அமெரிக்கா விட்டுச் சென்றது.