News December 26, 2024
‘96’ 2ஆம் பாகத்தின் ஷூட்டிங் எங்க தெரியுமா?

‘96’ படத்தின் 2ஆம் பாகத்தின் ஷூட்டிங் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2ஆம் பாகம் குடும்பப் பிரச்னைகளை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் பிரேம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 8, 2025
காது குடைய buds யூஸ் பண்ணால்… எச்சரிக்கை

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News July 8, 2025
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல் நலக்குறைவால் சில நாள்களாக ஜோத்பூர் எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிர் பிரிந்தது. ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராகவும் வருமான வரி ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அஷ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News July 8, 2025
டெக்சாஸை மூழ்கடித்த பெரு வெள்ளம்… 104 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கெர் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.