News March 29, 2024

புள்ளி பட்டியலில் சிஎஸ்கே எந்த இடம் தெரியுமா?

image

2024 ஐபிஎல் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும், அணிகள் வகிக்கும் இடங்கள் மாறி வருகின்றன. சிஎஸ்கே அணி தாம் விளையாடிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. ராஜஸ்தான் அணியும் 2 வெற்றிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 3ஆவது இடத்தில் உள்ளது.

Similar News

News March 18, 2026

காமெடி நடிகரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ்

image

கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 55 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அதில் காமெடி நடிகரும், இயக்குநருமான ரமேஷ் பிஷாரடி முதல்முறையாக காங்கிரஸ் வேட்பாளராக பாலக்காடு தொகுதியில் போட்டியிடவுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து தான் பிறந்த மண்ணில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, உலகிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ‘கை’ சின்னத்தில் வேட்பாளராக களமிறங்குவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

News March 18, 2026

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. வந்தது அறிவிப்பு

image

நாளை (மார்ச் 19) தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின், 20-ம் தேதி வேலை நாளாக இருக்கும். அதன்பின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. அதாவது அடுத்த 4 நாள்களில் 3 நாள்கள் விடுமுறையாகும்.

News March 18, 2026

இபிஎஸ்சை சந்திக்கிறார் நயினார்

image

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று மாலை EPS-ஐ நயினார், எல்.முருகன் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர். அப்போது, பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்தும், TTV, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!