News September 4, 2025
ஜிஎஸ்டி வரி குறைப்பால் என்ன நடக்கும் தெரியுமா?

GST வரி குறைப்பால் அரசுக்கு ₹93 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், ஆடம்பர பொருட்களை 40%-க்குள் கொண்டு வருவதால் ₹45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் விளைவாக, ₹48 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், வரி குறைப்பால் மிச்சமாகும் பணத்தை மக்கள் செலவிட விரும்புவார்கள். இது அப்பணத்தை மீண்டும் பொருளாதாரத்திற்கு கொண்டுவரும். வரிகள் குறைக்கப்பட்டாலும், அரசுக்கு அதிக இழப்பு ஏற்படாது.
Similar News
News September 4, 2025
ED விசாரணை வளையத்தில் ஷிகர் தவான்

சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. ஏதேனும் அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தின்பேரில் ED விசாரிக்க உள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் திரை நட்சத்திரங்களான ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை கொடுத்துள்ளனர்.
News September 4, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪தமிழ்நாட்டின் <<17607679>>ஆற்றலை<<>> இங்கிலாந்து அமைச்சருக்கு எடுத்துரைத்த ஸ்டாலின்
✪ADMK <<17608848>>பொதுசெயலாளர் <<>>வழக்கு.. முக்கிய தீர்ப்பு வெளியானது
✪தங்கத்தின் <<17607979>>விலை <<>>சவரனுக்கு ₹80 குறைந்தது
✪இந்தியாவுக்கு <<17608254>>வரி <<>>விதிப்பால், அமெரிக்காவுக்கு பயன்: டிரம்ப்
✪ED விசாரணை <<17609011>>வளையத்தில் <<>>ஷிகர் தவான் ✪நாய்களுடனான <<17607805>>உறவை <<>>சிதைக்க கூடாது.. மிஷ்கின்
News September 4, 2025
போன் கேலரியில் ஆதார் Save பண்றீங்களா.. உஷார்!

உங்கள் போன் கேலரியில் ஆதார், பான் கார்டுகளின் போட்டோக்களை வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று பிரபல சைபர் செக்யூரிட்டி நிபுணர் ரக்ஷித் டாண்டன் அறிவுறுத்தியுள்ளார். ஹேக்கிங் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், இம்மாதிரியான முக்கிய ஆவணங்களின் போட்டோக்களை டிஜிலாக்கர்களில் சேவ் செய்து வைக்கலாம் என்றார். போனில் சில ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது அவை கேலரி அனுமதி பெறுவதால் ஆபத்து அதிகரிக்கிறது.