News April 9, 2024
குஷி படத்துக்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா?

விஜய், ஜோதிகா நடித்த குஷி படம் மெகா ஹிட்டானது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த படத்திற்கு முதலில் ‘முத்தம்’ என பெயர் வைத்தனர். ஆனால், தியேட்டருக்கு வரும் பெண்கள் டிக்கெட் எடுக்க சிரமப்படுவார்கள் என்று பலரும் ஆலோசனை கூறியதால், படக்குழு குஷி என்று பெயரை மாற்றியது. படத்தின் நிறைவு காட்சியில் விஜய்-ஜோதிகா இருவரும் முத்தம் கொடுக்கும் சீன் இருந்ததால் படக்குழு முத்தம் என்று முதலில் பெயரிட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
நடிகை என்பதால் காதலன் பிரிந்து சென்றார்: மிருணாள்

தனது முன்னாள் காதலன் தான் ஒரு நடிகை என்பதால் தன்னை பிரிந்து சென்றதாக மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நீ மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள், உன்னை கையாள்வது கடினம் என கூறி காதலன் பிரிந்து சென்றார் எனக் குறிப்பிட்டார். மேலும், அந்த உறவு முடிவுக்கு வந்தது நல்லது எனவும், இல்லையெனில் எதிர்காலத்தில் தனக்கு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறினார்.
News February 2, 2026
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

67 வயது கணவரின் ஆணுறுப்பை மனைவி அறுத்துக் கொலை செய்த சம்பவம் ஸ்பெயினை அதிர வைத்துள்ளது. கழுத்தில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடலை போலீஸ் கைப்பற்றியுள்ளது. கைதான பெண்மணி குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்; ஆனால் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் திருடர்கள் கைவரிசை

மறைந்த DCM அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், பலே திருடர்கள் 15 பேரிடம் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றுள்ளனர். சுமார் 8,000 போலீசார் இருந்தபோதிலும், ₹30 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


