News April 24, 2025
ஏ.சி.யில் இருக்கும் ‘Ton’ எதை குறிக்கிறது தெரியுமா?

புதிதாக ஏ.சி வாங்க போனால், முதலில் அது எத்தனை Ton என்ற கேள்வியே பெரிதாக எழும். 1 Ton என்றால், 1000 கிலோ எடை கொண்டதா? என்ற கேள்வி எழும். ஆனால், இந்த Ton ஏ.சி.யின் எடையை குறிப்பதில்லை. ஏ.சி.யின் Ton என்ற சொல் அதன் குளிரூட்டும் திறனைக் குறிக்கிறது. ஏ.சி மாட்டப்படும் இடத்தை வைத்து இந்த Ton வகையை வாங்கலாம். பெரிய இடம் என்றால், 2 Ton ஏ.சி. சிறிய இடம் என்றால் 1 Ton ஏ.சி.யே போதும்.
Similar News
News September 15, 2025
தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும்: சவுரவ் கங்குலி

இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி, உலகம்முழுவதும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதேசமயம் எதற்காகவும் விளையாட்டை நிறுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணி கைகுலுக்காதது குறித்த கேள்விக்கு, எல்லாருக்கும் அவரவர் பக்கம் ஒரு வாதம் இருக்கும் என பதில் அளித்தார்.
News September 15, 2025
சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000 மீ ஓட்டத்தில், இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர், நேற்று நடைபெற்ற 500 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக போட்டிகளின் 12-வது சீசனிலும் வெண்கலம் வென்றிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
News September 15, 2025
234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஹரி நாடார்

நாடார் மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், நாடார் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்காக குரல் கொடுக்கும் நபராக நாங்கள் இருப்போம் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் சத்திரிய சான்றோர் படை கட்சி தனித்தே நிற்கும் என்ற அவர், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார். 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,727 வாக்குகள் பெற்றிருந்தார்.