News October 15, 2025
இதில் மறைந்திருக்கும் எண் என்னவென்று தெரிகிறதா?

ஒரு குட்டி கேம் விளையாடலாம். மேல் உள்ள புகைப்படத்தில் மறைந்திருக்கும் எண் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்களுக்கு தெரியும் எண்ணை கமெண்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து, அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள்.
Similar News
News October 15, 2025
கரூர் துயரம்: இரவில் CM ஸ்டாலின் ஆலோசனை

கரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரசியல் கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா, நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. CM ஸ்டாலின் இதுதொடர்பாக என்.ஆர்.இளங்கோ MP, அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனையில் ஈடுபட்டார்.
News October 15, 2025
இந்திய வங்கிகள் வெட்கப்பட வேண்டும்: மல்லையா

தனது சொத்துக்களை விற்று ₹14,100 கோடி மீட்டுள்ளதாக நிதியமைச்சகமே அறிவித்துள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால், அது குறித்த வெளிப்படையான அறிக்கையை இன்னும் இந்திய வங்கிகள் வெளியிடவில்லை எனவும், இதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். வங்கிகளில் வாங்கிய கடனை விடவும் அதிகம் வசூலித்துவிட்டதாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் அவர், தற்போது லண்டனில் இருக்கிறார்.
News October 15, 2025
National Roundup: மங்கோலிய அதிபருடன் பேச்சுவார்த்தை

*இந்தியா வந்துள்ள மங்கோலிய அதிபரை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். *சாதிய பாகுபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய ம.பி. ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. *ராஜஸ்தானில் அரசு பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 20 பேருக்கு, PM மோடி தலா ₹2 நிவாரணம். *பிஹாரில் 48 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.