News August 9, 2024
இந்திய அணியின் அடுத்த தொடர் எது தெரியுமா?

இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதன்பிறகு, இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடவுள்ளது. வங்கதேச
அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் செப். 19- 23ஆம் தேதி வரையிலும், 2ஆவது டெஸ்ட் கான்பூரில் செப். 27- அக்.1 வரையிலும் நடைபெறவுள்ளது. T20 தொடர் அக். 6இல் தொடங்குகிறது.
Similar News
News November 14, 2025
₹72,999 விலையில் இந்தியாவில் அறிமுகமான OnePlus 15

பல்வேறு வதந்திகள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் OnePlus 15 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் Snapdragon 8 Elite Gen 5 processor-ல் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 7,300mAh பேட்டரி, 16GB வரை RAM, 512GB வரை ஸ்டோரேஜ் என 2 வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. 6.78 இன்ச் டிஸ்பிளே, முன் கேமரா 32MP, பின் கேமரா 50MP திறன் கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை ₹72,999.
News November 14, 2025
டெல்லி தாக்குதல் JeM சதி வேலையா?

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக ஜெய்ஷ் – இ – முகமது (JeM) அமைப்பின் சதி வேலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட <<18258367>>டாக்டர் ஷஹீன் சயீத்<<>>, JeM தளபதி உமர் ஃபரூக்கின் மனைவி அஃபிரா பிபியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அஃபிரா, JeM அமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் பிரிவின் முக்கிய நபர் ஆவார்.
News November 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 14, ஐப்பசி 28 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம் ▶சிறப்பு: சுக்கிரன் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: அபிராமி அந்தாதி பாடி அம்மனை வழிபடுதல்.


