News September 11, 2025
வெற்று ஊசியை செலுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

உங்கள் உடம்பில் வெற்று ஊசியை செலுத்தினால் அது உங்கள் உயிருக்கே ஆபத்து என சொன்னால் உங்களால நம்பமுடிகிறதா? வெற்று ஊசியில் இருக்கும் காற்று ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துமாம். இதனால் அதிகபட்சமாக மாரடைப்பு கூட ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஊசியில் இருக்கும் காற்றின் அளவு, செலுத்தப்படும் இடத்தை பொருத்து விளைவானது மாறுபடும். எனவே, விளையாட்டுக்கு கூட இத பண்ணாதீங்க. SHARE.
Similar News
News September 11, 2025
CM ஸ்டாலின் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80) இன்று காலமானார். சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின், ஆ.ராசா, அமைச்சர் பி.டி.ஆர். உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
News September 11, 2025
அதிமுகவின் முடிவுகளை அமித்ஷா எடுப்பாரா? ஆ.ராசா

பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டு விட்டதாக ஆ.ராசா விமர்சித்துள்ளார். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்று கேட்ட அவர், தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்க அதிமுக துடிப்பதாகவும் சாடியுள்ளார்.
News September 11, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவும் நேபாள கைதிகள்?

கடந்த 24 மணி நேரத்தில் நேபாள சிறைகளில் இருந்து 13,572 கைதிகள் தப்பியுள்ளதாக அந்நாட்டு போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாகவும், குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களாகவும் இருக்கின்றனர். நேபாளத்தின் இன்றைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சிறை கைதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், அது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.