News April 13, 2025
BYE என்பதன் அர்த்தம் தெரியுமா?

‘Be With You Everytime’ என்ற சொற்றொடரின் சுருக்கம் தான் BYE. இது 16ஆம் நூற்றாண்டில் ‘கடவுள் உங்களுடன் இருப்பார்’ (God Be With You) என்ற சொற்றொடரில் இருந்து பெறப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வார்த்தை மத ஆசீர்வாதங்களையும், பிரிந்து செல்லும் மக்களுக்கு தெய்வீக பாதுகாப்பின் அவசியத்தையும் எதிரொலித்தது. இருப்பினும், காலப்போக்கில் ‘குட்பை’ விடைபெறுதலுக்கான உலகளாவிய வார்த்தையாக மாறிவிட்டது.
Similar News
News January 19, 2026
‘கம்பவுண்டர்’ ஏன் அந்த பெயர் தெரியுமா?

‘டாக்டர் ஆகலன்னா என்ன, கம்பவுண்டர் ஆகலாம்’, 90s கிட்ஸ் அதிகம் கேட்ட டயலாக். ஆனால், கம்பவுண்டர் என்பது வெறும் உதவியாளர் பணி அல்ல. அன்று மருந்துகளில் பிணைப்பு ரசாயனங்கள் இல்லாததால், பல்வேறு மூலக்கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து (Compounding) மருந்துகளை உருவாக்கினர். இதனாலேயே ‘கம்பவுண்டர்’ என்று பெயர். இதற்கான டிப்ளமோ படிப்புகளும் இருந்தன. நவீன மருந்துகளின் வருகையால் இன்று அந்த பணி மறைந்துவிட்டது.
News January 19, 2026
பாமக எனக்கே சொந்தம்: வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்

டெல்லி HC வழிகாட்டுதலின் படி, பாமகவுக்கு உரிமை கோரி சென்னை HC-ல், ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். கூட்டணி தொடர்பாக வேறும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் அது செல்லாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி, சின்னமும் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 19, 2026
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பாஜக: தமிழிசை

ஜல்லிக்கட்டை ‘காட்டுமிராண்டி விளையாட்டு’ என்ற காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது என தமிழிசை விமர்சித்துள்ளார். பாஜக அரசுதான் தடையை நீக்கி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததாக கூறிய அவர், ஆனால் அதை தற்போது திமுகவின் விழாவாக மாற்றிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். மேலும்,
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.


