News October 24, 2024
AQI என்றால் என்ன தெரியுமா?

காற்றில் எந்த அளவுக்கு மாசு கலந்துள்ளது என்பதை அளவிட Air Quality Index (AQI) என்ற சுட்டெண் உதவுகிறது. காற்றில் நுண்துகள்கள் (PM2.5, PM10), நச்சு வாயுக்கள் கலந்திருக்கும் அளவை பொறுத்து 0 முதல் 500 வரை AQI எண் வழங்கப்படுகிறது. அதன்படி, 0-50 AQI இருந்தால் நல்லது, 100 வரை குழந்தை, முதியவர் நலத்தை பாதிக்கும், 100-க்கு மேல் உடல்நலக் கேடு, 150-க்கு மேல் உடல்நலனுக்கு மிக மிக ஆபத்தான சூழலை குறிக்கும்.
Similar News
News December 17, 2025
விலை ₹8,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பைக் வாங்க போறீங்களா? பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் டிசம்பர் மாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹2.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 17, 2025
இருமொழிக் கொள்கையில் திமுக அரசு வெளி வேஷம்: EPS

நவோதயா பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக EPS சாடியுள்ளார். TN-ல் நவோதயா பள்ளிகள் அமைக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை SC கடந்த 15-ம் தேதி தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் முறையாக வாதிடாமல் TN அரசு கோட்டை விட்டதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இருமொழி கொள்கையில் பொம்மை முதல்வரின் குட்டு மக்களுக்கு புரிந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News December 17, 2025
ரேஷன் கடையில் புதிய பொருள்.. அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டுமென்பது நீண்ட நாள்களாகவே தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அத்துடன், அரை லிட்டருக்கான தொகையில் பாதியை மானியமாக வழங்கி, மீதியை விலையாக நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


