News December 8, 2024
தமிழகத்தின் மரம், விலங்கு, பழம் எது தெரியுமா?

நாட்டின் பல அடையாளங்களை அறிந்து வைத்திருக்கும் உங்களில் பலருக்கும் தமிழகத்தின் அடையாளங்களை குறித்து தெரியுமா. நாட்டிற்கு அடையாளங்கள் இருப்பது போலவே, ஒவ்வொறு மாநிலத்திற்கும் தனி அடையாளங்களும் இருக்கிறது. தமிழகத்தின் நடனம் பாரதநாட்டியம் என தெரிந்தவர்களுக்கு தமிழகத்தின் மரம் பனைமரம் * தமிழகத்தின் விலங்கு நீலகிரி வரையாடு * மாநிலத்தின் பழம் பலாப்பழம் * தமிழகத்தின் பூ காந்தள் பூ.
Similar News
News March 10, 2026
பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி!

பிரபல நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். இவர் கமல் நடித்த ‘சூரசம்ஹாரம்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். ஜென்ம நட்சத்திரம், விட்னஸ் போன்ற படங்களை இயக்கிய அவர், மனசுக்குள் மத்தாப்பு, அதிசய மனிதன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் கடந்த சில வருடங்களாக அனாதை ஆசிரமம் நடத்தி வந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 10, 2026
இலவசம் கொடுப்பது கேடுகெட்ட ஆட்சிமுறை: சீமான்

தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என சீமான் விமர்சித்துள்ளார். இலவசத்தை அறிவிப்பது கேடு கெட்ட ஆட்சிமுறை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஆள் மாற்றம் தான் நடக்கிறது, ஆட்சி முறை மாறவில்லை எனவும் தெரிவித்தார். பணம் வாங்கிய மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ஓட்டுக்கு பணம் வாங்கும் இடத்தில் ஜனநாயகம் செத்து விடுகிறது என பேசியுள்ளார்.
News March 10, 2026
வங்கி கணக்கில் ₹9,000.. சற்றுமுன் டெபாசிட்

பெண்கள் வங்கி கணக்கில் ₹5,000 செலுத்தி தமிழக அரசு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்தது. அதேபோல, அசாமில் ஆளும் பாஜக அரசு அருந்தோய் திட்டத்தின் கீழ் 40 லட்சம் மகளிர் வங்கி கணக்குகளில் ஒரே தவணையாக ₹9,000 வரவு வைத்துள்ளது. தமிழ்நாடுடன் சேர்ந்து அசாமுக்கும் தேர்தல் வரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்க பாஜக இந்த நகர்வை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


