News August 29, 2025
பிரதீப் ரங்கநாதனின் சட்டை ஸ்டோரி தெரியுமா ?

விஜய்யை போல நடிகர் PR மேடைகளில் குட்டி கதை சொல்பவர். தற்போது அவர் பேசிய சட்டை ஸ்டோரி செம வைரல். சாதா சட்டை போட்ட பையன் உழைச்சு காஸ்ட்லி சட்டை போட்டா, பழச மறந்துட்டனு சொல்லுவாங்க. சரின்னு பழைய சட்டை போட்டா, நடிக்கிறனு சொல்லுவாங்க. சட்டைய கிழிச்சுட்டா, பைத்தியம்னு சொல்லுவாங்க. பிறருக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால் பைத்தியம் ஆகிடுவோம். எனவே வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும் என்று அவர் கூறினார்.
Similar News
News August 29, 2025
ரஷ்யாவுக்கு உக்ரைன் கொடுத்த பெரும் அடி

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு எரிபொருள் வழங்கி வந்த ரஷ்யா, தற்போது உள்நாட்டு மக்களின் தேவைக்கே எரிபொருள் வழங்க முடியாமல் திணறி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறும் உக்ரைன், அதேவேளையில் மற்றொரு புறம் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறது.
News August 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 442
▶குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
▶ பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
News August 29, 2025
ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?