News August 31, 2025

’Pookie’ வார்த்தை உருவான கதை தெரியுமா?

image

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ‘POOKIE’ என்ற வார்த்தை, 1900-களில் ஜெர்மன் மொழியில் குழந்தைகளை குறிக்கும் சொல்லாக இருந்திருக்கிறது. அப்போது பேமஸ் ஆகாத இந்த ‘Pookie’, 1960களில் வெளியான ‘Garfield’s teddy bear’ என்ற கார்ட்டூனில் இடம்பெற்றதால் அனைவராலும் அறியப்பட்டது. இதுதான் தற்போது செல்லப்பிராணிகள், மனதிற்கு பிடித்தவர்கள் மீது அன்பை வெளிப்படுத்தும் வார்த்தையாக மாறியிருக்கிறது. SHARE.

Similar News

News September 2, 2025

ஆப்கனுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

image

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், 15 டன் உணவுப் பொருள்கள், 1,000 டெண்ட்டுகளை இந்தியா நிவாரண உதவியாக ஆப்கனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேவையான உதவிகள் அளிக்க தயார் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News September 2, 2025

விமர்சனம் கழுத்தை துண்டிக்க கூடாது: மிஷ்கின் வருத்தம்

image

திரை விமர்சனம் என்பது ஒரு கலைஞனின் கழுத்தை துண்டிப்பது போல் இருக்கக்கூடாது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். சினிமா விமர்சனங்கள் படங்களின் வியாபாரத்தை கெடுப்பதால், தயாரிப்பாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் மிஷ்கின் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும், விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 446 ▶குறள்: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். ▶ பொருள்: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

error: Content is protected !!