News August 31, 2025
‘கூலி’ ரிலீஸ் தேதி தெரியுமா?

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி அமேசான் OTT-ல் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படம் ₹500 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Similar News
News September 1, 2025
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ-க்கு மதுரை கோர்ட் பாராட்டு தெரிவித்திருந்தது. ஆனால், புதிய திருப்பமாக குற்றப்பத்திரிகையை கோர்ட் இன்று திருப்பி அனுப்பியுள்ளது. பல குறைகள் இருப்பதால் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியுள்ளதாம். குறுகிய காலத்தில் தாக்கல் செய்ததால் குறையா (அ) தகவல்கள் மறைக்கப்படுகிறதா என பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
News September 1, 2025
வாழ்க்கையில் தொலைக்கவே கூடாத நண்பர்கள்

ஸ்கூல், காலேஜ், பணியிடம் என தினம் தினம் 50 நபர்களையாவது நாம் சந்திப்போம். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையான நண்பர்களா என்றால், இல்லை. உண்மையான நண்பர்களுக்கென தனி பண்புகள் இருக்கும். அப்படியான நண்பர்கள் நமது வாழ்வில் இருந்தால் இந்த உலகத்தில் சாத்தியமற்றது என ஒன்றுமே இல்லை. அப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை வாழ்வில் மிஸ் பண்ணிடாதீங்க.
News September 1, 2025
மீண்டும் ‘மீசைய முறுக்கும்’ ஹிப் ஹாப் ஆதி

2017-ல் சூப்பர் ஹிட்டான ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. ஹிப் ஹாப் ஆதி இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. இப்படம் வசூல் ரீதியாக பெற்ற வெற்றியை தொடர்ந்து பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோ ஆக ‘அன்பறிவு’, ‘வீரன்’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சுந்தர்.சி இப்படத்தை தயாரிக்கிறார்.