News August 10, 2024
முடி நரைப்பதற்கான காரணம் தெரியுமா?

இன்றைய காலத்தில் இளம் வயதினர் உள்பட பலரும் நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். நரை முடி ஏன் வருகிறது என்பதைக் கண்டறிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் ‘மெலனோசைட் ஸ்டெம்’ எனும் செல்கள் முடியின் நிறத்தை தீர்மானிப்பது தெரியவந்துள்ளது. உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மெலனோசைட் ஸ்டெம் செல்கள் பலவீனமடைதல் போன்ற காரணங்களால் முடி நரைப்பது தெரியவந்துள்ளது.
Similar News
News November 14, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

நேற்று உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹60 குறைந்து ₹11,840-க்கும், சவரனுக்கு ₹480 குறைந்து ₹94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ₹2400 உயர்ந்த நிலையில், இன்று வெறும் ₹480 மட்டுமே குறைந்துள்ளது.
News November 14, 2025
சற்றுமுன்: 150 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

பிஹாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், NDA 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. BJP – 87, JDU – 60, LJP (RV) 2, HAM 2 என மொத்தம் NDA கூட்டணி 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், RJD 69, CONG 9, CPL (ML) 5, VIP 1 இடங்கள் என மொத்தம் 84 இடங்களில் மட்டுமே MGB முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
மதவாதம் இருக்குமிடத்தில் EPS இருக்க மாட்டார்: KTR

EPS இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது, மதவாதம் இருக்கும் இடத்தில் EPS இருக்க மாட்டார் என்று KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மதவாத சக்தியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


