News March 9, 2025
சிக்கன் விலை தெரியுமா?

நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
Similar News
News March 9, 2025
2 மாவட்டங்களில் நாளை விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (மார்ச் 10) விடுமுறை ஆகும். அதேபோல், வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே நடைபெறும் பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2025
CT FINALS: பரிசுத்தொகை இவ்வளவா..?

இந்தியா – நியூசி., இடையேயான CT ஃபைனல்ஸில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 2.24 மில்லியன் டாலர் (₹19.52 கோடி) கிடைக்கும். தோல்வியுற்ற அணிக்கு 1.12 மில்லியன் டாலர் (₹9.76 கோடி) வழங்கப்படும். CT தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் (இந்தியா, நியூசி., உட்பட) தலா 125,000 டாலர் (₹1.08 கோடி) வழங்கப்படும். அதேபோல, தொடரின் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 34,000 (₹2.95 கோடி) டாலர்கள் வழங்கப்படும்.
News March 9, 2025
ட்ரெண்டிங்கில் #Retirement

Champions Trophy தொடரின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் #Retirement என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நியூசி., அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பின் நட்சத்திர வீரர் ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆகியோர் தங்களது ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு நெட்டிசன்கள், கனத்த இதயத்துடன் வாழ்த்து கூறுகின்றனர்.