News March 30, 2025
பழைய ஸ்டார்க் தெரியுமா? வீரனுக்கு சாவே இல்லை..

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தன் வேகத்தாலும், ஸ்விங் பவுலிங்காலும் எதிர் அணியை மிரள வைப்பதில் வல்லவர். காயம், பார்ம் அவுட் போன்ற காரணங்களால் சமீப காலமாக ஸ்டார்க் பழையபடி விளையாடவில்லை. ஆனால் இன்றைய IPL ஆட்டத்தில் ஸ்டார்க்கை பழைய வெறியுடன் காண முடிந்தது. SRHக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் யார் என்பதை மீண்டும் உலகறிய செய்தார். பர்ப்பிள் கேப்பையும் வென்றார்.
Similar News
News April 1, 2025
அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலைக்கு கல்தா?

2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமையலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி கூட்டணி அமைந்தால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கக்கூடாது என அதிமுக விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு, அதிமுக தலைமைக்கு நெருக்கமான எல்.முருகன், நயினார் நாகேந்திரன் போன்றவர்களில் யாரேனும் ஒருவரை தலைவராக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News April 1, 2025
பிரிட்டிஷ் பள்ளிகளில் திரையிட உள்ள பிரபல சீரிஸ்

பதின் பருவத்தில் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் சிக்கல்களை விவரிக்கும் படமாக அடலசன்ஸ் சீரிஸ் உருவானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் அடலசன்ஸ் சீரிஸை திரையிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. பாலியல் மாற்றங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் நன்றாக தெரிந்து கொள்ள இப்படம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 1, 2025
FACTCHECK: நித்தியானந்தா மரணம்?

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக இரண்டு நாள்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேரலையில் பேசிய அவரது சகோதரி மகன், சுவாமிஜி இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால், வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் இப்படி நாடகமாடலாம் என்ற பேச்சும் எழுகிறது. எனவே, அவரது மரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.