News December 4, 2024
டேட்டிங்கில் ட்ரெண்டாகும் Nanoship தெரியுமா?

Relationship, Situationship வரிசையில் புதிய ட்ரெண்ட் தான் Nanoship. இதனை ஈசியாக புரிந்துக்கொள்ள, மெட்ரோவில் நீங்கள் ஒருவரை சந்திக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். ஒரு Spark உண்டாக, அப்போது நிகழும் ஒரு சின்ன conversation, ஒரு coffee, சிறு புன்னகைகள், அத்தருணத்தில் கிடைக்கும் ஒரு கனெக்ஷன், அவ்வளவுதான். இது தான் Nanoship. Lonelyயாக இருப்பவர்களுக்கு வந்துள்ளது இந்த ட்ரெண்ட். நீங்க ரெடியா?
Similar News
News April 26, 2025
மாதம் ரூ.1,000 உதவித் தாெகை பெறும் 9.19 லட்சம் மாணவர்கள்

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விகளில் சேரும் மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதன்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் எத்தனை மாணவிகள், மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 4,93,689 மாணவிகள், 4,25,346 மாணவர்கள் பயனடைவதாக கூறப்பட்டுள்ளது.
News April 26, 2025
தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவை கலக்கி வரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விரைவில் கோலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைக்கவுள்ளார். அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜான்வியை விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்கலாம்.
News April 26, 2025
சனி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் அனுமன் வழிபாடு

சனி பகவானின் தொல்லையில் இருந்து விடுபட சனிக்கிழமை அனுமன் வழிபாடு மிகவும் உதவும். காலையில் குளித்து அருகில் உள்ள அனுமன் கோயில் அல்லது அனுமன் சன்னதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். அதனைத் தொடர்ந்து, 11 முறை அனுமனின் சன்னதியை, அனுமன் சாலிசாவை சொல்லியபடியே சுற்றி வரவும். பிறகு, துளசி மாலையை அனுமனுக்கு போட்டு, ராம நாமத்தை சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். இது சனி தொல்லையை நீக்கும் என்பது ஐதீகம்.