News January 31, 2025

SORRY என்ற சொல்லின் அர்த்தம் தெரியுமா?

image

SORRY என்பது மன்னிப்பு என்ற சொல்லின் மாற்றாகவே கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் வருந்துவது, வருத்தம் தெரிவிப்பது தான் SORRY என்பதன் உண்மையான பொருள். SORRY என்ற ஆங்கில வார்த்தை ‘sarig’ அல்ல ‘sorrow’ என்பதிலிருந்து உருவானது. அதன் பொருள் ‘கோபம்’ அல்ல ‘அதிருப்தி’. ஏதாவது தவறு செய்த பிறகு வருத்தம் தெரிவிப்பதற்கான உணர்வுகளை வெளிப்படுத்த SORRY என்ற சொல்லை உபயோகிக்க வேண்டும்.

Similar News

News August 29, 2025

9 மாதங்களுக்கு பிறகு சீரடைந்த இந்தியா – கனடா உறவு

image

9 மாதங்களுக்கு பிறகு கனடாவுக்கான இந்திய தூதராக தினேஷ் பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்தியாவிற்கான கனடா தூதராக கிறிஸ்டோபர் கூட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டின் அப்போதைய PM ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, இந்திய தூதர் திரும்ப பெறப்பட்டார்.

News August 29, 2025

மோதல் இல்லை; முரண்பாடு இருக்கு: மோகன் பகவத்

image

BJP தலைவர்களை RSS தேர்வு செய்வதில்லை என மோகன் பகவத் கூறியுள்ளார். நாக்பூரில் RSS விழாவில் பேசிய அவர், RSS – BJP இடையே பிரச்னை நிலவுவதாக சிலர் கூறுவதில் உண்மை இல்லை என்றார். மேலும், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை; ஆனால், சில அமைப்புகளுடன் முரண்பாடுகள் இருக்கிறது என்றார். அதோடு, சில விஷயங்கள் சண்டை போல தோன்றலாம். ஆனால் அது சண்டையல்ல எனவும், தேச நலனே எங்களின் குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

TR பாலு சொத்து மதிப்பு ₹10,000 கோடியா?

image

திமுக MP TR பாலுவுக்கு ₹10,000 கோடி சொத்துக்கள் இருப்பதாக அண்ணாமலை கூறிய விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில் இன்று, கோர்ட்டில் ஆஜரான TR பாலு, <<17545001>>செய்தியாளரை ஒருமையில்<<>> பேசிய விவகாரம் மேலும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனிடையே, TR பாலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு என பலரும் தேடத் தொடங்கியுள்ளனர். 2024 LS தேர்தல் <>பிரமாண பத்திரத்தில்<<>> தனக்கு ₹45.7 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!