News December 1, 2024
உலகின் மிக நீண்ட பேருந்து சேவை தெரியுமா?

ஒருநாள் முழுவதும் பேருந்தில் பயணம் செய்வதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், 50 நாள்கள் தொடர்ந்து மக்கள் பேருந்து பயணம் செய்ததை நினைத்து பாருங்கள். ஆம், லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்கு 50 நாள்கள், 32,669 கி.மீ. பயணம் செய்து பலர் வந்துள்ளனர். இந்தப் பேருந்து போக்குவரத்து 1957இல் ஆரம்பித்து, 1976 வரை செயல்பாட்டில் இருந்தது. ரூ.1,933க்கு(1960இல்) உணவு, தங்குமிடம், போக்குவரத்து அடங்கும்.
Similar News
News August 21, 2025
தவெக மாநாட்டில் மோர் குடிப்பவர்களே அலர்ட்

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில், உணவு விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக தயிர், தக்காளி சாதம் ₹70- ₹80, வெஜ் பிரியாணி ₹100, கூழ் ₹50, தண்ணீர் பாட்டில் ₹40, கரும்பு ஜூஸ் ₹30, சாத்துக்குடி ஜூஸ் ₹50, ஐஸ்கிரீம் ₹70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இலவசமாக கொடுப்பது போல மோரை கொடுத்து, ஒரு டம்ளர் ₹50 என சிலர் அடாவடியாக பணம் வசூல் செய்கின்றனராம்.
News August 21, 2025
BIG BREAKING: இந்த பொருள்கள் விலை குறைகிறது

GST வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க FM நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் உள்ளிட்ட வகைகளுக்கு தற்போது 12% வரியும், பிரிட்ஜ், AC, சிறிய வகை கார்கள் உள்ளிட்ட பொருள்கள் 28% வரியிலும் இருந்த நிலையில் அவற்றில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.
News August 21, 2025
அஜித் மரணத்தில் புதிய குற்றவாளி.. அதிர்ச்சி தகவல்

அஜித் குமார் மரண வழக்கில், CBI ஒரே மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது குற்றவாளியாக தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் பெயரையும் சேர்த்திருப்பது குற்றப் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே, நிகிதாவின் நகைத் திருட்டு வழக்கு விசாரணையை CBI தொடங்க இருப்பதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.