News October 2, 2025
பறக்கும் நரி தெரியுமா? பாருங்க

ராஜஸ்தான்-குஜராத் எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள், கிட்டத்தட்ட 5 அடி இறக்கைகள் கொண்ட பெரிய வௌவால்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெரிய வௌவால்களுக்கு நரி போன்ற முகம் இருப்பதால் இதனை ‘பறக்கும் நரி’ என்றும் அழைக்கின்றனர். பெரும்பாலும் பழங்களை உண்ணும் இந்த வௌவால்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலே, போட்டோக்கள் உள்ளன. நீங்க இதுபோன்று பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 2, 2025
டானிக் குடித்த குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் அரசால் வழங்கப்பட்ட <<17890074>>இருமல் டானிக்கை<<>> குடித்த குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த Kaysons டானிக்கானது, இதற்கு முன் 40 முறை தர சோதனையில் தோல்வியடைந்ததும், பலமுறை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், அதை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியுள்ளது. இதனால், அரசு வழங்கும் மருந்துகள் குறித்து கவலை எழுந்துள்ளது.
News October 2, 2025
விசிகவிற்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும்: EPS

ஆட்சியாளர்களுக்கு தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என EPS அறிவுறுத்தியுள்ளார். விசிக மதுஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை திருமாவளவன் மறக்க வேண்டாம் எனவும், விசிகவிற்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுகவினர் அளிக்கும் போலி வாக்குறுதிகள் ஒருபோதும் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
38-ம் ஆண்டில் பாம்பன் பாலம் PHOTOS

1988 வரை ராமேஸ்வரத்தை இந்தியாவுடன் இணைக்க பாம்பன் ரயில் பாலம் மட்டுமே இருந்தது. 1974-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1988 அக்டோபர் 2-ம் தேதி ‘அன்னை இந்திரா காந்தி பாலம்’ என பெயரிடப்பட்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால், பாம்பன் சாலைப் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் 38-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சிறப்பை SHARE பண்ணுங்க.