News September 4, 2025
டாப் 5 பணக்காரர்களின் கல்வி தகுதி தெரியுமா?

உலகின் டாப் 5 பணக்காரர்களாக எலான் மஸ்க், லாரி எலிசன், மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ், லாரி பேஜ் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடிகளாக உள்ளது. ஆனால் இவர்களில் மூவர் மட்டுமே கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். மீதமுள்ள இருவர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்த டாப் 5 தொழிலதிபர்களின் கல்வி தகுதி, சொத்து மதிப்பு குறித்து மேலே உள்ள புகைப்படங்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Similar News
News April 11, 2026
அரியலூர்: தேர்தல் பணிகள் தீவிர ஆய்வு

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில், தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகளை காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன. மேலும், செலவின பார்வையாளர் லட்சுமி நாராயண பொக்கா தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
News April 11, 2026
திருவிழா சாதியை பரப்புவதற்கு அல்ல: கோர்ட்

புதுக்கோட்டை கோயில் விழா ஒன்றின் அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயருடன் அச்சிடக்கோரிய மனு மீது மதுரை HC முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. சாதி என்பது இல்லை; அது மக்களின் மனதில் மட்டுமே உள்ளது என கூறியுள்ளது. சமத்துவ சமுதாயத்தை மேம்படுத்தி சாதியை ஒழிப்பது மட்டுமே திருவிழாக்களின் நோக்கம் என்ற HC, திருவிழாக்கள் சாதியை பரப்புவதற்கான இடமாக மாறக்கூடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
News April 11, 2026
ஹனிமூனுக்கு அனுப்பி வைப்பேன்: சீமான்

பிற கட்சிகளின் இலவச வாக்குறுதிகளை விமர்சித்த சீமான், தானும் வீட்டிற்கு 1 கிலோ தங்கம் கொடுப்பேன் என ஆவேசத்துடன் கூறினார். புதுமண தம்பதிகளை தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பேன் என்று அவர், இதையெல்லாம் கேட்க எவ்வளவு கேவலமாக உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார். அதேநேரம், கல்வி, மருத்துவம் & குடிநீரை மட்டுமே இலவசமாக தருவேன் என்றார்.


