News September 26, 2025
நீல நிற ஆதார் அட்டை தெரியுமா?

UIDAI தான் நீல நிற ஆதார் அட்டையை வழங்குகிறது. இது 5 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும். அதன் பின், புதுப்பிக்க வேண்டும். இதனை பெற, UIDAI இணையதளத்தில் புதிய ஆதாரை தேர்ந்தெடுக்கவும். அதில், பெற்றோர்களின் தகவல்களை கொடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் பதிவிட வேண்டும். இதன்பின்னர் 60 நாள்களில் ஆதார் அட்டை வழங்கப்படும்.
Similar News
News September 26, 2025
பாஜகவிற்கு புது பெயர் வைத்து விமர்சித்த ராகுல்

பாஜகவின் இன்னொரு பெயர் ‘பேப்பர் திருட்டு’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து, இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், ஆனால் இதில் எல்லாம் அக்கறை காட்டாத பாஜக, அதிகாரத்தில் நீடிக்கவே அக்கறை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், வேலையின்மை என்பது வாக்கு திருட்டுடன் நேரடியாக சம்பந்தபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
BREAKING: லெஜண்ட் காலமானார்

இந்திய சிகையலங்கார லெஜண்ட் என்று போற்றப்படும் ஹபிப் அகமது (84), வயது மூப்பால் காலமானார். இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் இந்திய தலைவர்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்தவர். அந்த பாரம்பரியத்தை ஹபிப்பும் தொடர்ந்தார். Ex PM இந்திரா காந்தியின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் கருப்பு / வெள்ளை கீற்று ஹேர் ஸ்டைல், Ex ஜனாதிபதி அப்துல் கலாமின் அலையலையான சில்வர் ஹேர்ஸ்டைல் இவர் உருவாக்கியது தான். #RIP
News September 26, 2025
யார் எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீர்கள்?

இந்தியாவில் இனிப்புகள் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. அந்த வகையில், எந்த மாநில மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறார்கள்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், ஒருநபர் மாதம் சராசரியாக எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்க எவ்வளவு இனிப்பு சாப்பிடுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.