News March 17, 2025

சுய உதவிக்குழு அடையாள அட்டை பயன்கள் தெரியுமா?

image

54 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதில் கிடைக்கும் பயன்களை தெரிந்து கொள்ளலாம். *அரசு பஸ்களில் 25 கிலோ வரை பொருள்களை இலவசமாக கொண்டு செல்லலாம் *கோ ஆப்டெக்ஸ் துணிகள் விலையில் 5% கூடுதல் தள்ளுபடி *கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை *சலுகை விலையில் ஆவின் நிறுவன பொருள்கள் *இணைய சேவை மையங்களில் 10% தள்ளுபடி *CM மருத்துவ காப்பீடு திட்ட பிரதான அத்தாட்சி.

Similar News

News September 23, 2025

Landing Gear-ல் ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவன்!

image

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் ஆப்கன் சிறுவன்(13) மறைந்திருந்தது அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. விமானத்தின் Landing Gear பகுதியில் மறைந்திருந்த சிறுவன், ஏர்போர்ட்டின் தடைசெய்யப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததை அடுத்து, பிடிபட்டுள்ளான். ஆர்வ மிகுதியால் இவ்வாறு செய்துவிட்டதாக சிறுவன் கூற, தீவிர விசாரணைக்கு பிறகு, சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளான்.

News September 23, 2025

நரம்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கும் மூலிகை தேநீர்!

image

வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்த வல்லாரை கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➱வல்லாரை கீரை இலைகளை கழுவி, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும் ➱மிதமான தீயில், 2- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி எடுக்கவும். ➱தேவையென்றால், தேன் சேர்த்தால், சுவையான ஹெல்தியான வல்லாரை கீரை தேநீர் ரெடி. இப்பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க!

News September 23, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. மிகப்பெரிய தாக்கம்

image

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ‘எச்-1பி’ விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ₹88.30-ஐ மீண்டும் தொட்டது. இதன் எதிரொலியாகவும், டாலர்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கி குவித்ததாலும், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ₹1,120 உயர்ந்துள்ளது.

error: Content is protected !!