News October 25, 2025

உலகின் 8-வது கண்டம் தெரியுமா?

image

உலகின் 8வது கண்டத்தை புவியியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பின் பாறை மாதிரிகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருப்பதாகவும், புதிய கண்டத்தின் 94% பகுதிகள் நீருக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 49 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த கண்டத்துக்கு Zealandia என்றும் பெயர் வைத்துள்ளனர். SHARE IT

Similar News

News October 25, 2025

எனது விவாகரத்தை சிலர் கொண்டாடினார்கள்: சமந்தா

image

விவகாரத்து, உடல் நலப் பிரச்னை என தடைகளை தாண்டி மீண்டும் நடிப்பு, தயாரிப்பு என சமந்தா பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தனக்கு மயோசிடிஸ் நோய் வந்தபோதும், விவாகரத்தின் போதும் பலரும் அதை கொண்டாடி மகிழ்ந்ததாக கூறியுள்ளார். அதை பார்த்து மனம் வலித்ததாகவும், பின்னர் படிப்படியாக அதில் இருந்து வெளியே வந்ததாகவும் சமந்தா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை

image

விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். விராட், ரோஹித் அணியில் தங்களுக்கான இடம் உறுதி என மெத்தனமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விராட் விரைவில் பழைய நிலைக்கு வரவில்லை என்றால், 2027 உலகக்கோப்பையில் அவர் இடம்பிடிப்பது கடினமாகி விடும் எனவும் எச்சரித்துள்ளார்.

News October 25, 2025

வரலாற்றில் இன்று

image

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

error: Content is protected !!