News September 17, 2024
தட்கல் டிக்கெட் கட்டண விதி தெரியுமா?

ரயிலில் பயணத் தேதிக்கு முந்தைய நாளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் வசதியை ரயில்வே வழங்கி வருகிறது. இதற்கான முன்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கும். தட்கலுக்கு சாதாரண கட்டணத்தை விட ₹100 முதல் ₹500 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். தட்கல் டிக்கெட் உறுதியான பின் கேன்சல் செய்தால், பணம் திருப்பித் தரப்படாது. வெயிட்டிங் லிஸ்டில் இருப்போருக்கு ₹60 போக மீதப்பணம் தரப்படும்.
Similar News
News August 20, 2025
FLASH: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிகிலி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் இருந்த குளத்தில் குழந்தைகள் குளித்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5-ம் வகுப்பு மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. So Sad..!
News August 20, 2025
மாலை 6 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

*PM, CM, மத்திய அமைச்சர்கள் 30 நாள்கள் வரை சிறையில் இருந்தால், அவர்களது பதவி பறிக்கும் <<17462647>>மசோதா<<>> லோக்சபாவில் தாக்கல். *பதவியை பறிக்கும் மசோதாவை கருப்பு மசோதா எனவும், இன்று கருப்பு நாள் என்றும் <<17464824>>CM ஸ்டாலின்<<>> கண்டனம். *<<17463695>>தவெக<<>> மாநாட்டு பணியின் போது, 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து. *<<17464229>>கூலி<<>> படத்திற்கு U/A சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
News August 20, 2025
தமிழகத்தில் 7 மாதங்களில் 850 கொலை: சாடிய EPS

திமுக தேய்ந்து கொண்டிருப்பதால் வீட்டின் கதவை தட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக EPS சாடியுள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றார்.