News January 21, 2025
திருப்பதி உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்வு 10 நாள்கள் நடைபெற்றது. அப்போது, 6 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். 1 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ₹34 கோடியே 43 லட்சம் வசூல் ஆகியிருக்கிறது. சுமார் 1.20 லட்சம் பக்தர்கள் ₹300 டிக்கெட்டில் தரிசனம் செய்தனர்.
Similar News
News August 26, 2025
இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என TN அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட அன்புமணி, இத்திட்டத்துக்காக கிணறுகள் அமைக்க ONGC-க்கு அனுமதி அளித்தது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்றும், இந்த முடிவை அவர்கள் தன்னிச்சையாக எடுத்ததாக திமுக நாடகமாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் சாடினார்.
News August 26, 2025
இன்றே இப்போதே கேட்டுவிடுங்கள்..

‘நாங்கல்லாம் அந்த காலத்துல’ எனச் சொல்லும் தலைமுறையிலும் சரி, இன்றைய நவீன வாழ்விலும் சரி, நாம் பரபரப்பாகவே இயங்கி வருகிறோம். இதனிடையே, நமக்கு பிடித்தவர்களிடம் கூட சில விஷயங்களை பேசவோ, கேட்கவோ மறந்திருப்போம் (அ) வேண்டுமென்றே தவிர்த்திருப்போம். இதற்கான விடைகளை தெரிந்துகொண்டால் சந்தேகம், பயம், வெறுப்பு போன்றவை அடுத்த நொடியே நீங்கும். இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு உள்ளதா, யாரிடம் கேட்கப் போகிறீர்கள்?
News August 26, 2025
சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்: வேலுமணி அட்டாக்

தவெக மாநாட்டில் ஸ்டாலின், EPS என யாரையும் விட்டு வைக்காமல், விஜய் அட்டாக் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், இபிஎஸ் பற்றி பேச தவெக தலைவர் விஜய்க்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி கட்சி தொடங்கிய சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டு போய்விட்டார்; அதே நிலைதான் விஜய்க்கும் வரும் என்று சாடியுள்ளார்.