News October 1, 2025
RBI-யிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா?

தங்கம் விலை ₹87 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், RBI-யிடம் மட்டும் சுமார் ₹4.32 லட்சம் கோடி மதிப்பில் 880 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் GDP வளர்ச்சி 6.8%ஆக அதிகரிக்கும்; சில்லறை விலை பணவீக்கம் 2.6%ஆக குறையும் எனக் கூறிய அவர், அமெரிக்காவின் வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 17, 2026
தமிழக தேர்தல்.. ECI புதிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் ECI அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவின்போதும் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை.
News March 17, 2026
விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை: EPS அடுத்த அறிவிப்பு

குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு ₹2,000, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 சிறப்புத் தொகை, பொங்கல் பரிசு ₹1,000 உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை 3 கட்டங்களாக EPS அறிவித்திருந்தார். இந்நிலையில், முழுமையான தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News March 17, 2026
ஈரான் தலைவர் ஓர் தன்பாலின ஈர்ப்பாளர்: US உளவுத்துறை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என US உளவுத்துறை நம்புவதாக New York Post தெரிவித்துள்ளது. அவர், தனது சிறுவயதில் ஆசிரியர் ஒருவருடன் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி டிரம்ப்பிடம் கூறியபோது அவர் சிரித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஓரினச்சேர்க்கை குற்றம் என இருக்கும் நிலையில், இந்த தகவல் தற்போது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.


