News February 16, 2025

சிக்கன் விலை எவ்வளவு தெரியுமா?

image

சென்னையில் இறைச்சி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.130க்கும், இறைச்சி ரூ.160க்கும், நாட்டுக் கோழி கறி ரூ.360க்கும் விற்பனையாகிறது. முட்டை விலை மொத்த விற்பனையில் ரூ.4.65க்கும் சில்லரை விலையில் ரூ.5.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் காரணமாக சிக்கன் விலை சற்று குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 4, 2026

ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

image

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

News March 4, 2026

சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

image

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 3, 2026

9 ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த பாஜக

image

வரும் 16-ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிஹாரில் இருந்து <<19289207>>தேசிய தலைவர் நிதின் நபின்<<>> மற்றும் சிவேஷ் குமார் ஆகியோரை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (அசாம்), லட்சுமி வர்மா(சத்தீஸ்கர்), சஞ்சய் பாட்டியா (ஹரியானா), மன்மோகன் சமல், சுஜீத் குமார்(ஒடிசா), ராகுல் சின்ஹா(மேற்கு வங்கம்) ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.

error: Content is protected !!