News August 10, 2025
நடிகர் விஜய்யின் சொத்து எவ்வளவு தெரியுமா?

நடிகரும், TVK தலைவருமான விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை சொகுசு பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும். குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக ₹100 முதல் ₹120 கோடி வரை அவர் சினிமா மூலம் வருமானம் ஈட்டுவதாகவும் TOI செய்தி கூறுகிறது. அடேங்கப்பா..!
Similar News
News August 10, 2025
VIRAL: இதுக்கு பெயர்தான் லக்!

நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை ஒருமுறையாவது பார்த்து விட மாட்டோமா? என தவம் கிடப்போம்! ஆனால், ஒருவருக்கு கோலியும், ஏ பி டிவில்லியர்ஸும் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். சத்தீஸ்கரை சேர்ந்த மணிஷ், புதிதாக வாங்கிய சிம், ரஜத் பட்டிதரின் பழைய நம்பர். அந்த நம்பரில் தான், கோலியும், ABD-யும் போன் செய்துள்ளனர். விஷயமறிந்து படிதர் போலீசில் புகார் அளிக்க, அந்நபர் சிம்மை திருப்பி கொடுத்துள்ளார்.
News August 10, 2025
கூலி ரிலீஸ்.. ஆபிசுக்கு லீவு விட்ட ‘குட்’ கம்பெனி

‘கூலி’ பட ரிலீசுக்கு இன்னும் 4 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், என்ன சொல்லி ஆபிசில் லீவு போடுவது என ஒரு கூட்டம் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், பலரும் விண்ணப்பிக்க மதுரையைச் சேர்ந்த ‘Uno aqua care’ நிறுவனம், 14-ம் தேதி கம்பெனிக்கு லீவு விட்டுள்ளது. Official-ஆக ‘ரஜினிகாந்த் வாழ்க’ என குறிப்பிட்டு, லெட்டரும் வெளியிட்டுள்ளது. நம்ப கம்பெனியும் லீவு கொடுத்தா நல்லா இருக்கும்’ல?
News August 10, 2025
கடன் EMI குறைகிறது.. HDFC வங்கி புதிய அறிவிப்பு

இந்தியாவின் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC, தனது நிதியாதார செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR)குறைத்துள்ளது. பெரும்பாலான கடன் தவணைகளின் MCLR விகிதம் 0.05% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணைத் தொகை குறைய இருப்பதால் லட்சக்கணக்கானோர் பயனடைவர். நீங்கள் HDFC வங்கியில் கடன் வாங்கி இருந்தால், அடுத்த தவணை தானாகவே குறைந்துவிடும்.