News June 3, 2024
எவ்வளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது தெரியுமா?

இந்தியாவில் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். அதாவது, நாட்டில் அதிகபட்சமாக ₹500 நோட்டுகள் 86.7% புழக்கத்தில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக ₹100 நோட்டுகள் 5.9%, ₹200 நோட்டுகள் 4.4%, ₹50 நோட்டுகள் 1.3%, ₹20 நோட்டுகள் 0.8%, ₹10 நோட்டுகள் 0.7%, ₹5 நோட்டுகள் 0.1% ₹2 நோட்டுகள் 0.1% புழக்கத்தில் உள்ளன.
Similar News
News September 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 21, 2025
பரப்புரையில் தவறான தகவலை சொன்ன விஜய்

அலையாத்தி காடுகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நாகையில் கடல்சார் கல்லூரி எதுவும் இல்லை என்றும் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டினார். இதனை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. 2021-ல் 45 சதுர கி.மீ பரப்பளவாக இருந்த அலையாத்தி காடுகள் தற்போது 90 சதுர கி.மீ. என பெருகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நாகையில் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News September 21, 2025
H1B விசா: மவுனத்தை கலைத்த இந்தியா

H1B விசா கட்டண உயர்வுக்கு, இந்தியா முதல்முறையாக ரியாக்ட் செய்துள்ளது. இந்த விஷயத்தில் நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கட்டண உயர்வால் இருநாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றும் இதில் உள்ள சிரமங்களை US அரசு உணர்ந்து செயல்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டண உயர்வால் பல இந்தியர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.