News September 2, 2025
TMC என்றால் எத்தனை லிட்டர் தண்ணீர் தெரியுமா?

காவிரி, மேட்டூர் அணை நீர்மட்டம் குறித்து பேசும்போது, அடிக்கடி TMC என்ற சொல்லை கேட்டிருப்போம். TMC என்பதன் விரிவாக்கம் ‘Thousand Million Cubic feet’. இது நீரின் அளவை அளக்கும் அலகு ஆகும். ஒரு TMC என்பது 28 பில்லியன் லிட்டர், அதாவது 2,830 கோடி லிட்டர்கள். நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள் எவ்வளவு தண்ணீர் சேமிக்கின்றன, எவ்வளவு தண்ணீரை வெளியேற்றுகின்றன என்பதை அளக்க TMC பயன்படுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News September 2, 2025
படுக்கைக்கு முன் தம்பதிகள் செய்ய வேண்டியவை ❤️

❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.
News September 2, 2025
பாக்.,-ஐ ஆதரித்ததால் இந்தியா பழிவாங்குகிறது: அஜர்பைஜான்

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக, இந்தியா உலக அரங்கில் தங்களை பழிவாங்குவாதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக விரும்பிய தங்களது விண்ணப்பத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சாடியுள்ளது. இதுபோன்று இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும், பாகிஸ்தான் உடனான தங்களது நட்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
News September 2, 2025
முதல்வரின் வெளிநாடு பயணம் ஒரு மோசடி: அன்புமணி

CM ஸ்டாலினின் வெளிநாடு பயணம் ஒரு மோசடிப் பயணம் என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், ₹1000 கோடி முதலீடு செய்யவுள்ள Nordex நிறுவனம் சென்னைக்கு அருகிலும், ₹201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm-papst தரமணியிலும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் செய்திருக்க வேண்டிய ஒப்பந்தங்களுக்காக CM ஜெர்மனி சென்றது முற்றிலும் வீணானது என்று அவர் சாடியுள்ளார்.