News March 23, 2025
‘எல் கிளாசிக்கோ’ எப்படி வந்தது தெரியுமா?

ஸ்பெயின் மொழியில் எல் கிளாசிக்கோ என்பதற்கு ஆங்கிலத்தில் The Classic என்பது பொருள். இந்த வார்த்தை அங்குள்ள கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மோதும்போது பயன்படுத்தப்படுகிறது. இப்படி சிறந்த அணிகள் மோதும் நிகழ்வை, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் எல் கிளாசிக்கோ எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இதுதான் IPL-ல் CSK vs MI போட்டியை ரசிகர்கள் அப்படி அழைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
Similar News
News January 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?
News January 8, 2026
‘ஜனநாயகன்’ மிகப்பெரிய வெற்றி பெறும்: சிபிராஜ்

தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிபிராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜனநாயகன்’ படத்தை சுற்றி நடக்கும் விவகாரங்கள், அதனை பெரும் வெற்றிக்கு அழைத்து செல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 8, 2026
இந்த அடி போதுமா தம்பி? அஸ்வின்

சதம் மேல் சதமாக அடித்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியை அஸ்வின் வியப்புடன் பாராட்டியுள்ளார். 171(95), 50(26), 190(84), 68(24), 108*(61), 46(25) & 127(74) என கடந்த 30 நாட்களில் வைபவ் அடித்த ரன்களை பட்டியலிட்ட அவர், என்ன தம்பி, இந்த அடி போது, இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா என பதிவிட்டுள்ளார். U19 WC, IPL வருவதால் அடுத்த 4 மாதங்கள் வைபவுக்கு அற்புதமாக இருக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.


