News February 1, 2025

இந்தியாவில் வரி இல்லாத மாநிலம் தெரியுமா?

image

இந்தியாவில் வருமான வரி இல்லாத ஒரே மாநிலம், சிக்கிம் தான். மன்னர் ஆட்சியில் இருந்த சிக்கிம், 1947-ல் இந்தியாவுடன் இணைந்த போது, வரிவிதிப்புக்கு உட்படாத சிறப்பு சலுகை பெற்றது. 1950 ஒப்பந்தமும் இதை உறுதிப்படுத்தியது. 1975-ல் நாட்டின் 22 மாநிலமாக மாறிய பின்பும், இந்த சிறப்பு உரிமை தொடர்கிறது. ஆனால், சிக்கிம் குடிமக்கள் என்ற COI சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே வரிவிலக்கு. மற்றவர்களுக்கு வரியுண்டு.

Similar News

News March 2, 2026

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச வேண்டாம்: CTR

image

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பாக SM-ல் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெகவின் CTR நிர்மல்குமாரிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 2, 2026

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

image

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

News March 2, 2026

சின்னம்மை பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை

image

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!