News October 24, 2024
ரயில்வேயின் இந்த இலவச வசதிகள் பற்றி தெரியுமா?

ரயில்வேயில் இலவச வைஃபை, ஏசி கோச்களில் பெட்ஷீட், தலையணைகள் வழங்கப்படுவது அனைவருக்கும் தெரியும். அதேபோல் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு லாக்கர் வசதி வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் வசதியும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும், ரயில் தாமதமானால், கட்டணம் செலுத்தாமல் காத்திருப்பு அறையில் தங்கலாம். துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் ரயில் தாமதமானால் இலவச உணவும் வழங்கப்படுகிறது.
Similar News
News July 7, 2025
தொண்டர்கள் வெள்ளத்தில் இபிஎஸ் ரோடு ஷோ

மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்.. என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சுற்றுப்பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News July 7, 2025
26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
News July 7, 2025
வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!