News October 3, 2025

கோல்டு ஓவர்டிராப்ட் தெரியுமா?

image

தங்கம் / நகைகளை <<17906231>>வங்கி லாக்கரில்<<>> வைப்பது பாதுகாப்பானதல்ல என்று நினைத்தால், கோல்டு Overdraft-ஐ பயன்படுத்தலாம். இதன்படி, தங்கத்தை வங்கிகளில் கொடுத்து, அதற்கு இணையான மதிப்பை ஓவர்டிராப்டாக பெறலாம். உங்களுக்கு பணம் தேவையெனில், அதிலிருந்து எடுத்து பயன்படுத்தலாம். அந்த தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். உங்கள் தங்கத்துக்கு முழுமையான இன்ஷூரன்ஸ் கவரேஜ் உள்ளதால் கவலைப்பட தேவையில்லை. SHARE IT

Similar News

News October 4, 2025

போரை நிறுத்தலன்னா… ஹமாஸை எச்சரித்த டிரம்ப்

image

இஸ்ரேலுடன் போரை நிறுத்த ஹமாஸுக்கு அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வரும் ஞாயிறுக்குள் ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஹமாஸ் நரகத்துக்கு தான் போக வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்குக்கு பல்லாண்டுகளாக அச்சுறுத்தலாக உள்ள ஹமாஸ், கடந்த அக்.07, 2023-ல் இஸ்ரேலில் மிகப்பெரிய இனவழிப்பை செய்தது என்ற அவர், இதற்கு பதிலடியாக இதுவரை 25,000+ ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

கிட்னியை விற்று ஐபோன் வாங்கியதால் வந்த வினை

image

ஐபோன் மீதான மோகத்தால் சீனாவில் வாலிபர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடக்கிறார். வாங் சாங்குன் என்பவர் 2011-ல் ஐபோன் 4 மற்றும் ஐபேட் 2 வாங்குவதற்காக தனது வலது கிட்னியை 20,000 Yuan (₹2.5 லட்சம்) விற்றுள்ளார். சில மாதங்களில் அவரது மற்றொரு கிட்னியும் பாதிப்படைந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக டயாலிசிஸ் மிஷின் உதவியோடு உயிர் வாழ்ந்து வருகிறார்.

News October 4, 2025

விஜய் – ராஷ்மிகா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும் ❤️❤️❤️

image

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் நீண்டகாலம் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடும்பத்தினர் முன்னிலையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நிறைவடைந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு பிப்ரவரியில் இருவரும் கரம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்..!

error: Content is protected !!