News October 17, 2025
போனில் சத்தம் கம்மியா கேட்குதா? Simple Solution!

உங்கள் Android போன் பழசானதால் சத்தம் கம்மியா கேக்குதா? இந்த சிம்பிளான டெக்னிக் மூலம் அதை சரி செய்யலாம். ➤Settings-க்கு செல்லுங்கள் ➤அதில் ‘Sounds and vibration’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும் ➤’Sound quality and effects’ என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதில் ‘Dolby Atmos/Super Audio’ என்ற ஆப்ஷனை ON செய்யுங்கள் ➤பின்னர் ஹெட்போனை கனெக்ட் செய்தால் ஆடியோ தரமாக கேட்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 8, 2025
குழந்தைகளுக்கு இந்த Snacks கொடுக்காதீங்க!

குழந்தைகளுக்கு சாப்பாடு பிடிக்கிறதோ இல்லையோ, நொறுக்குத் தீனி சாப்பிட ரொம்ப பிடிக்கும். அவர்கள் அடம்பிடித்து கேட்பதால் பெற்றோர்களும் சிப்ஸ், பிஸ்கெட், சாக்லேட், பர்கர் என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வாங்கி கொடுத்துவிடுவர். இதனால் அவர்களுக்கு இளம்வயதிலேயே சுகர், உடற்பருமன் பிரச்னைகள் வருகிறது. எனவே, இதற்கு பதிலாக பழங்கள், நட்ஸ், சோளம் உள்ளிட்ட ஹெல்தியான பொருள்களை கொடுங்கள். SHARE.
News December 8, 2025
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் நுழைந்த பிரக்ஞானந்தா

FIDE Circuit-ல் 115 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார். இந்த ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
விஜய் அதிரடி முடிவு.. திமுக, அதிமுக அதிர்ச்சி

கொங்கு மண்டலத்தில் வாக்கு வங்கியை தக்க வைக்க அதிமுகவும், எப்படியாவது செல்வாக்கு பெற வேண்டும் என திமுகவும் போட்டிப்போட்டு களப்பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு அதிர்ச்சியளிக்க, விஜய் திட்டம் தீட்டி வருகிறார். டிச.16 அன்று ஈரோட்டில் நடக்கும் தவெக பொதுக்கூட்டம் அதற்கு அச்சாரமிடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையனின் மூலம் கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.


