News October 9, 2025

இந்த அரிதான Blood Group உங்களுக்கு இருக்கா?

image

உலகில் 40–50 பேருக்கு மட்டுமே ‘Golden Blood’ (Rh null) எனும் Blood Group உள்ளது. இவ்வகை ரத்தத்தில் Rh ஆன்டிஜென்கள் இல்லாததே இதனை அரிதாக்குகிறது. Rh null ரத்த வகையினரின் உடல் மற்ற ரத்த வகைகளை ஏற்காது. எனவே, சர்ஜரிகளுக்கு முன்பாக உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, டாக்டர்கள் அதனை Freeze செய்கின்றனர். தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே!

Similar News

News October 9, 2025

நண்பர் டிரம்ப்பை வாழ்த்திய மோடி

image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசா அமைதி திட்டத்தின் வெற்றிக்காக தனது நண்பர் டிரம்ப்பை வாழ்த்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் பேசியதாக குறிப்பிட்டுள்ள மோடி, வரும் காலங்களில் USA உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார். முன்னதாக, அமைதி திட்டத்தை கொண்டு வந்தபோதும் மோடி, டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

News October 9, 2025

கர்வா செளத்: மனைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

image

<<17961188>>கர்வா செளத்<<>> நாளில் *சூரிய உதயம் முன் மாமியாரால் சமைத்து கொடுக்கப்படும் ‘Sargi’-யை உண்ணலாம் *அமைதியாகவே அன்றைய பொழுதை கழியுங்கள். *பிற திருமணமான பெண்களுடன் சேர்ந்து விநாயகர், கெளரி, சவுத் மாதாவை வணங்குங்கள். *நிலவு வந்த பிறகு, சல்லடை (அ) துப்பட்டா வழியாக கணவரை பாருங்கள். பின்னர் குடிநீர் (அ) உணவை கணவர், மனைவிக்கு கொடுக்க வேண்டும். *விரதம் கலைத்த பின்பு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

News October 9, 2025

வார், பதான் பட நடிகர் காலமானார்

image

நடிகரும், பாடி பில்டருமான வரீந்தர் சிங் குமான்(42) உயிரிழந்த சம்பவம் பாலிவுட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. BICEP காயத்திற்காக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 2009-ல் ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற அவர், பஞ்சாபி படங்கள் மூலம் திரையுலகில் நுழைந்தார். ஹிந்தியில் பதான், வார், டைகர் 3 உள்ளிட்ட முக்கியமான படங்களிலும் குமான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. RIP

error: Content is protected !!