News October 26, 2025
கண்களில் உங்களுக்கு இத்த பிரச்னை இருக்கா?

நமது வாழ்க்கை முறையில் இன்று அதிக நேரம் செல்போன், கணினி உள்ளிட்டவையில் செலவிடுவதால் பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கண்களில் அடிக்கடி நீர் வடிதல், கண் சிவந்து காணப்படுவது, அடிக்கடி தலைவலிப்பது, கண் முன் ஏதாவது ஒன்று மிதப்பது போல தெரிவது, மங்கலான பார்வை உள்ளிட்டவை கண் பிரச்சனைக்கான முக்கியமான அறிகுறிகள். SHARE IT
Similar News
News October 26, 2025
வரலாற்றில் இன்று

*1947 – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நாள்
*1950 – கொல்கத்தாவில் முதல் தொண்டு நிறுவனத்தை அன்னை தெரசா தொடங்கினார்
*1965 – பாடகர் மனோ பிறந்த நாள்
*1985 – நடிகை அசின் பிறந்த நாள்
*1999 – SC ஆயுள் தண்டனைக்கான காலத்தை 14 ஆண்டுகளாக நிர்ணயித்தது
*2015 – ஆப்கானித்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 398 பேர் பலி
News October 26, 2025
குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்தும் சூப்பர் புட்ஸ்

சத்தான உணவு குழந்தைகளின் ஞாபக சக்தி, சிந்தனை மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்கும். அதற்கு முக்கியமான சில இதோ: * முட்டை – மூளைக்குத் தேவையான புரதம் உள்ளது *தானியங்கள் (கோதுமை,ராகி, ஓட்ஸ்) – நிலையான சக்திக்கு அடித்தளம் *கடலை மற்றும் பச்சை பயறு – புரதச்சத்து மிகுந்த உணவுகள் *வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் – மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் *சுரைக்காய், பீட்ரூட் – மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
News October 26, 2025
NATIONAL ROUNDUP: இரட்டை குழந்தைகளை கொன்ற தந்தை

*ராஞ்சியில் தீப்பிடித்து எரிந்த பஸ்ஸில் இருந்து பத்திரமாக தப்பிய 40 பயணிகள் *திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் பக்தர்கள் கடும் அவதி *நாக்பூரில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் *மகாராஷ்டிராவில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரட்டை குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை


