News April 7, 2025
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

நமது உடலில் நமக்கு தெரியாமலே ஏற்படும் குறைபாடுகளுள் ஒன்று ஹைபோ தைராய்டிசம். அதாவது, நமது கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் போவது. இதனை கண்டறிவது மிகவும் சிரமம். ஆனாலும், உடல் பருமன், சோர்வு, ஆற்றல் குறைவு ஆகிய அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்னையை கண்டறியலாம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளவும்.
Similar News
News April 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை.
▶குறள் எண்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். ▶பொருள்: தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.
News April 9, 2025
தோனியின் ஆவேசம் வீண்.. தொடரும் சோகம்

ஆட்டங்களை முடித்து வைப்பதில் வல்லவரான தோனிக்கு இந்த சீசன் மிக மோசமாக அமைந்துள்ளது. தோனி இருக்கிறார் வெற்றி நிச்சயம் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் அது மாறவில்லை. நேற்று 5வது வீரராக களமிறங்கிய தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். எனினும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. மீண்டு வருமா சென்னை?
News April 9, 2025
பான் இந்தியா என்பது அசிங்கம்: செல்வராகவன் காட்டம்

பான் இந்தியா என்ற அசிங்கமான கலாசாரம் வந்ததால், நல்ல சினிமாக்கள் குறைந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் காட்டமாக தெரிவித்துள்ளார். குத்துப் பாடல்கள் கொண்ட கமர்ஷியல் படங்களே தற்போது அதிகரித்துள்ளதாகவும், 100 நாள்கள் ஓடிய படங்களெல்லாம் இப்போது 3 நாள்களில் முடிந்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மிக சுலபமாக ஒரு படத்தைக் குதறி, இயக்குநர்களின் வாழ்க்கையை காலி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.