News February 17, 2025
இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா..?

*நிறைய பேர் இருக்கும் இடத்தில் உங்களை தவறாக நினைத்து விடுவார்களோ என பயம் எப்போதும் இருக்கும் * தேவையே இல்லை என்றாலும், பிறரிடம் உங்களை பற்றி அதிகமாக பகிர்ந்து கொள்வீர்கள் *தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும் *எப்போதும் யாராவது கூடவே இருக்க வேண்டும் என நினைப்பீர்கள் *பிறரின் கவனத்தை பெற, ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள். இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் தனிமையால் வாடுகிறீர்கள்.
Similar News
News March 4, 2026
நடிகர் ரஜினிகாந்த் வழக்கு.. பரபரப்பு உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான கட்டடத்தை ரஜினிகாந்த் குத்தகைக்கு விட்டிருந்தார். இந்த இடத்துக்கு வரி செலுத்தும்படி, ரஜினிக்கு சேவை வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஜினி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், விசாரணையின் முடிவில், சேவை வரித்துறை விதித்த வரியை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
News March 4, 2026
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுகவுக்கு உள்ள 4 இடங்களில் காங்., & தேமுதிகவுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசபா தேர்தல் மார்ச் 16-ல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு உள்ள 2 சீட்களில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
News March 4, 2026
சற்றுமுன்: திமுகவுடன் கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

ஆதவ் – ராகுல் சந்திப்பு, காங்., தலைவர்களின் தவெக ஆதரவு நிலைப்பாடு என தவெக – காங்., கூட்டணிக்கான யூகங்கள் கடந்த மாதம் முழுவதுமே தமிழக அரசியலில் சுழன்றடித்தன. மேலும் சீட் ஒதுக்கீட்டில் திமுக இறங்க மறுப்பதால் தவெகவுடன் செல்லலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், திமுகவுடன் காங்., <<19298958>>தொகுதிப் பங்கீடு<<>> அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. இது விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.


