News October 6, 2025
இந்த 5 பழக்கங்கள் உங்ககிட்ட இருக்கா?

*எண்ணம் போல் வாழ்க்கை: நமது சிந்தனைகள், எண்ணமும் எப்போதும் பாசிடிவாக இருக்க வேண்டும் *நினைத்த இலக்கை தெளிவாக அடைய மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம் *புதிய விஷயங்களை கொஞ்சமாக கற்றறிந்து அதை செய்தாலும், மனம் புத்துணர்ச்சி பெறும் *உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் நம்பிக்கையை கொடுக்கும் *நேரத்தை வீணடிக்காமல் நினைக்கும் காரியத்தை உடனடியாக செய்ய தொடங்குங்கள்
Similar News
News October 6, 2025
பிஹாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பா?

பிஹார் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பிஹாரில் கடும் போட்டி இருக்கும் 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்., புகார் குறித்து விளக்கமளிக்கும் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதியை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 6, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரண தங்கத்தின் விலை ₹88 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 உயர்ந்து ₹88,480-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ₹110 உயர்ந்து ₹11,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News October 6, 2025
ஆட்சியில் பங்கு, அதிக சீட்.. ராஜேஷ்குமார்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒவ்வொரு காங்., தொண்டரின் விருப்பம்; அதையே நாங்கள் பிரதிபலிக்கிறோம் என்று காங்., சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். 1967-க்கு பிறகு காங்., ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும்; காங்., கட்சி அங்கம் வகிக்கக்கூடிய அரசு வரவேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும் என்றார்.