News February 10, 2025
அடிக்கடி விரல்களை நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கா..?

அடிக்கடி கையில் நெட்டி உடைக்கும் பழக்கம் இருந்தால், இனி உஷாராக இருங்கள். எலும்புகளுக்கு இடையே Synovial திரவத்தால் சிறு சிறு பபுள்கள் உருவாகி, எலும்புகள் உராயாமல் தடுக்கிறது. நாம் சொடுக்கு போடும் போது, இந்த பபுள் உடைந்து கீல்வாதத்திற்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடி வலிமையைப் பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். மூட்டுவலியும் ஏற்படலாம்.
Similar News
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு… அவசர ஆலோசனை

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி மற்றும் ஜெய்சங்கருடன், PM மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தட்டுப்பாட்டை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாம்.
News March 10, 2026
விமானங்களில் நீல நிற சீட்கள்.. காரணம் தெரியுமா?

விமானப் பயணம் பொதுவாக பலருக்கும் பயம் தரக்கூடும். அந்த பயத்தை போக்கி பயணிகள் அமைதியாக உணர விமானங்களில் பெரும்பாலும் நீல நிற சீட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உளவியல் ஆய்வுகளின்படி, நீல நிறம் நம்பிக்கையும் அமைதியும் தரும் நிறமாகக் கருதப்படுகிறது. மேலும், விமானத்தின் உள்ளே வெப்பநிலை குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். அந்த சூழலில் நீல நிறம் பயணிகளுக்கு மனநிம்மதி மற்றும் சாந்தமான உணர்வை தர உதவுகிறது.
News March 10, 2026
PG-களில் டீ, காபி கேன்சல்

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களுடன் கூடிய தங்கும் விடுதிகள் மற்றும் ஹாஸ்டல்களில் டீ, காபி விநியோகம் இருக்காது என்று TN விடுதிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல், சப்பாத்தி, தோசை வழங்கப்படாது. சாம்பார், குருமாவுக்கு பதில் சட்னி மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், side dish-க்கு பதில் வாரத்துக்கு 3 நாள் பப்ஸ்& முட்டை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.


