News November 15, 2024
Bed காபி, டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா…

காலையில் எழுந்ததுமே பல் தேய்க்காமல் Bed காபி, டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இப்பழக்கம் நல்லதல்ல எனக் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் இருப்பதால், வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்யுமாம். அப்படியாகும் சூழலில், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றுடன் காஃபின் சிறுநீர் வருவதை அதிகரிப்பதால், உடலில் நீரின் அளவு குறையும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Similar News
News March 2, 2026
வேலூரில் லஞ்சம் கேட்டாங்களா? உடனே CALL

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

திருச்சியில் அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்குச் சான்றாகும் என சாடியுள்ள தவெக, குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News March 2, 2026
தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


