News June 14, 2024
படுக்கையறையில் இவ்வளவு இருக்கா?

வீட்டின் படுக்கையறையை தென்மேற்கு, தெற்கு அல்லது மேற்கு திசைகளில் கட்ட வேண்டும். வடகிழக்கு திசையில், தென்கிழக்கு திசையிலும் அமைக்க கூடாது. இதற்கு காரணம், வீட்டில் லட்சுமி தங்கியிருப்பதுடன், மனநிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு அமையும் என நம்பப்படுகிறது. படுக்கையறையில் கண்ணாடிகளும், செவ்வக, சதுர வடிவிலேயே இருக்க வேண்டும். மற்ற எந்த வடிவமாக இருந்தாலும் ஆரோக்கிய குறைபாடுகள் குடும்பத்தில் வரலாம்.
Similar News
News March 2, 2026
பாலியல் வழக்கில் சிக்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர்

பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக, இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 2, 2026
40 ஆண்டுகளாக செய்ய நினைத்தது இதான்: இஸ்ரேல் PM

டெஹ்ரானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு கூறியுள்ளார். வரும் நாள்களின் இது மேலும் அதிகரிக்கும் என்ற அவர், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வலி கொடுப்பதாகவும் பேசியுள்ளார். தற்போது தங்களுடன் USA-ம் சேர்ந்துள்ளதால் 40 ஆண்டுகளாக செய்ய நினைத்ததை தான் இப்போது செய்யப்போவதாகவும், தீவிரவாதத்தை அழிப்பதே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

தங்கத்தை போலவே வெள்ளியும் இன்று குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்து ₹310-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹3.10 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஈரான் – US போரால் தங்கம், வெள்ளி விலை உயரும் என பொதுமக்கள் அச்சப்பட்ட நிலையில், விலை குறைந்தது இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


