News October 4, 2025
வாய் துர்நாற்றம் இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க!

பல்வேறு தருணங்களில் சங்கடத்தை ஏற்படுத்தும் வாய் துர்நாற்றத்தை போக்க, வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இவை, சுவாசத்தை புத்துணர்சியடைய செய்வதுடன், வாய் சுகாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. அவை என்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், இல்லாமல் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க
Similar News
News October 4, 2025
கரூர் விவகாரத்தில் EPS, பாஜக அரசியல் செய்கின்றனர்: TTV

கரூரில் நடந்தது விபத்து தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இண்டர்போல் விசாரணை நடத்தினாலும் விபத்து விபத்துதான் எனவும், கடந்த ஒருவாரமாக EPS, பாஜகவினர் இதில் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை CM நிதானமாக கையாண்டது பாராட்டுதலுக்கு உரியது எனவும், வரும் டிசம்பரில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
சிக்கன் சாப்பிட்டால் ஆபத்தா? உண்மை இதுதான்!

சிக்கனை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: *எலும்புகள், தசைகள் வலுப்பெறும் *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *இதய ஆரோக்கியம் மேம்படும் *மனநிலை சீராகும் *அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் கூடும். சிக்கனால் சிலருக்கு அலர்ஜி, இன்பெக்ஷன், ஹார்மோன் பிரச்னை ஏற்படலாம். அவர்கள் மட்டும் தவிர்க்கலாம்.
News October 4, 2025
எவ்வளவு சிக்கன் சாப்பிட்டால் நல்லது?

சத்தான உணவான சிக்கனை அளவாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 100 – 120 கிராம் என வாரத்துக்கு 3 நாள்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. சிக்கனின் மேல்தோல் நீக்கினால், ஓரளவு கொழுப்பை குறைக்கலாம். சிக்கனின் மார்பு பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. Fried டிஷ்களைவிட, வேக வைக்கப்பட்ட டிஷ்கள் நல்லது. வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். SHARE IT!