News September 28, 2024
நாய் வளர்க்கிறீர்களா? தமிழக அரசு எச்சரிக்கை

நாய்கள் வளர்ப்பு, இனப்பெருக்கத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், *நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற வேண்டும் *இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் *வாலை நறுக்குதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுதல் போன்றவற்றை செய்யக்கூடாது * நாயின் தோற்றத்தை செயற்கையாக மாற்றக்கூடாது என ஆணையிட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த குடும்பம்!

கணவன், மனைவி பிரிவிற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பூண்டு மற்றும் வெங்காயத்தால் குஜராத்தில் ஒரு குடும்பம் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. மனைவி தீவிர வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பூண்டு, வெங்காயம் சாப்பிடக்கூடாது. ஆனால், கணவனும் அவரது தாயாரும், அதை பொருட்படுத்தாமல் உணவில் சேர்த்து சாப்பிட்டதால், தம்பதிக்குள் நாள்தோறும் சண்டை. கடைசியில் 11 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
News December 10, 2025
அதிமுகவின் குரலாக ஒலிக்கும் நயினார்: செங்கோட்டையன்

விஜய்யை விமர்சித்த <<18514254>>நயினார் நாகேந்திரனுக்கு<<>> தவெகவின் KAS பதிலடி கொடுத்துள்ளார். நயினார் பாஜகவிற்காக பேசாமல், அதிமுகவுக்காக பேசிக்கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இதற்கு நயினார் அதிமுகவில் இணைந்தால்கூட நன்றாக இருக்கும் எனவும் KAS சாடியுள்ளார். மத்திய பாஜகவை பற்றி மட்டுமே இதுவரை தவெக விமர்சித்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜகவையும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
News December 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


