News October 9, 2025
உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.
Similar News
News October 9, 2025
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் இடங்கள்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்.9) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் திருமல்வாடி விபிஆர்சி கட்டிடம் பண்ணைக்குளம், நல்லம்பள்ளி புயுல்ஸ் பெத்ரஹள்ளி பள்ளி வளாகம், காரிமங்கலம் விபிஆர்சி கட்டிடம் மோதூர், அரூர் சக்தி முருகன் திருமண மண்டபம் தீர்த்தமலை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 9, 2025
விஜய்யின் உயிர் நண்பன் சஞ்சீவ் சொன்ன தகவல்

விஜய்யின் நண்பர் சஞ்சீவ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அவரிடம் கரூர் விவகாரம் தொடர்பான கேள்விகள் வைக்கப்பட்டது. அப்போது, சம்பவ இடத்தில் இல்லை என்பதால் தனக்கு அதை பற்றி பேச போதுமான அறிவு கிடையாது என அவர் சொன்னார். ஆனால், விஜய்க்கு எந்த பயமும் இல்லை எனவும், சரியான நேரம் வரும்போது களத்துக்கு அவர் செல்வார் எனவும் சஞ்சீவ் பதிலளித்தார்.
News October 9, 2025
சற்றுமுன்: அதிரடியாக கைது செய்தனர்

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் <<17944206>>மருந்தால் 21 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் <<>>அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீசார் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கோடம்பாக்கத்தில் வைத்து சற்றுமுன் கைது செய்தனர். அவரை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலைக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.